உலக நாடுகளின் கடன் மதிப்பீட்டை மூடீஸ் நிறுவனம் பொதுவாக “AAA” முதல் “C” வரை மதிப்பீடு செய்யும். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மூடிஸ்(Moody’s) நிறுவனம் அமெரிக்காவின் கிரடிட் ரேட்டிங்கை “AAA”இலிருந்து “Aa1” ஆக குறைத்துள்ளது.

அதாவது அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசாங்க கடன் மற்றும் வட்டி செலவுகளை பிரதிபலிக்கும் விதமாக மூடிஸ் நிறுவனம் அமெரிக்க கடனை “AAA” வில் இருந்து “Aa1″ஆக குறைத்துள்ளது.

தற்போது இந்த மதிப்பீடு அமெரிக்காவில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. இதுவரை அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங் மூடிஸ் நிறுவனம் குறைக்காமல் வந்துள்ளதாகவும், தற்போது எதிர்பார்க்காத அளவிற்கு குறைந்ததால் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவு சந்திக்கலாம் எனவும் பேசப்படுகிறது.