கோட் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு d aging  என சொல்லப்படும் தொழில்நுட்பம் சரியாக இல்லை எனவும் விஜய் முகத்தை பார்க்க அவ்வளவு நன்றாக இல்லை என பலரும் d aging செய்யப்பட்ட விஜய் முகத்தை கிண்டலடித்து வந்தனர்.

படத்திற்கு முன்னால் கிண்டல் அடிக்கப்பட்ட அதே முகம் படம் வெளியான பிறகு பலரால் பாராட்டப்படக்கூடிய ஒரு முக்கிய கதாபாத்திரமாக மாறி உள்ளது. படத்தின் டிரைலர் முழுவதும் விஜயின் பெயர் காந்தி என குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், படத்தில் காந்தியை பற்றி பேசுவதை விட படத்தில் உள்ள ஜீவன் கதாபாத்திரம் பற்றி அனைவரும் தற்போது பேச தொடங்கியுள்ளனர்.