
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோவை சுதா கொங்கரா வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டைட்டில் டீசர் தற்போது சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு மதராஸி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர் நீச்சல் முதல் பராசக்தி வரை பல பழைய பட டைட்டில்களில் நடித்த சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கும் பழைய டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தின் டைட்டில் தான் தற்போது எஸ்கே 23 படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது.