ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் திருமணச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒமிசா என்ற மகளும், நிகில் என்ற மகனும் இருந்துள்ளனர். அடிக்கடி திருமலைச்செல்வன் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் சுகன்யா தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் திருமண செல்வன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த திருமண செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் மீது ஊற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக சுகன்யாவும் ஒமிஷாவும் தப்பித்து விட்டனர். ஆனால் நான்கு வயது மகன் நிகில் மீது தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுகன்யாவும் அவரது உறவினர்களும் நிகிலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நிகிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமலை செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.