தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. நடிகர் விஜயின் படங்கள் வசூல் சாதனை புரிவதால் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக விஜய் திகழ்கிறார். அவர் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்தப் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுகிறார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார்.

இந்நிலையில் என்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விஜய் வரும்போது அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் விஜய் வருவதற்கு முன்பாக தன் தந்தையிடம் விஜயை பார்க்க வேண்டும் என கூறி  அழுது அடம் பிடித்துக் கொண்டிருந்ததோடு அவரை அடித்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் நடிகர் விஜய் வந்து நிலையில் காரில் இருந்து கீழே இறங்கினார். அவரைப் பார்த்தவுடன் அழுது கொண்டிருந்த சிறுவன் உற்சாகத்தில் தளபதி தளபதி என்று கத்த ஆரம்பித்து விட்டான். மேலும் நடிகர் விஜயின் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.