கேரள மாநிலம் அய்யம்புலா பகுதியைச் சேர்ந்தவர் தனேஷ்(38). இவர் டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனேஷ்க்கும் குறும்பபடி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனுஷின் டாக்சியை பயன்படுத்தி அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்து விட்டார்.

அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருப்பினும் அந்த பெண் தனேஷுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இந்த நிலையில் தனேஷ் அந்த பெண்ணின் மகள்களான 12 மற்றும் 10 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனேஷ் 12 வயது சிறுமியின் செல்போனில் இருக்கும் சில தோழிகளின் புகைப்படங்களை பார்த்துள்ளார். அந்த புகைப்படங்களை சிறுமியிடம் காட்டி அவர்களை வீட்டிற்கு அழைத்து வா என மிரட்டி உள்ளார்.

இதனால் அச்சத்தில் சிறுமி ஒரு கடிதத்தில் “எனது அப்பா உன்னை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்” என எழுதி தோழிகளிடம் கொடுத்துள்ளார். அதில் ஒரு தோழியின் அம்மா அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அவருக்கு கடிதம் மீது சந்தேகம் இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 12 வயது சிறுமியை அழைத்துச் விசாரித்த போது தனேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதனால் தனேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் தாய்க்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.