கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் திறம்பட தடுக்க முடியும் என அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித பாப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடையே அதிகம் காணப்படும் இரண்டாவது புற்றுநோயாகும். பெம்ப்ரோலிசுமாப் என்ற புதிய மருந்து, கதிர்வீச்சு மற்றும் மருந்துகளுடன் இந்த சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்டுள்ளது