
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த வருடம் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியிருந்த நிலையில், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகி 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவரே எழுதி தாய்க்கிழவி என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை தாய்க்கிழவி பாடல் கலந்துள்ளது. மேலும் இந்த தகவலை பட குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
100 Million views and counting! 🔥 Indha song-la irukka andha energy-eh vera! 💥 #ThaaiKelavi
▶️ https://t.co/8EB1qgAhen@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar #NithyaMenen #RaashiiKhanna @priya_Bshankar @dancersatz pic.twitter.com/A3VSl6OP6t
— Sun Pictures (@sunpictures) February 20, 2023