
தமிழகத்தில் வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இலவச வேட்டி சேலைகள் போன்றவைகளும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் காந்தி தற்போது பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் குறித்து சூப்பர் தகவலை கூறியுள்ளார்.
அதாவது தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.77 கோடி வேஷ்டிகளும் 1.77 கோடி சேலைகளும் தயாராகி வருவதாக அவர் கூறிய நிலையில், இந்த மாத இறுதிக்குள் அதாவது டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் 90 சதவீதம் பேருக்கு இலவச வேஷ்டி சேவைகள் வழங்கப்பட்டு விடும் என்றும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் வழங்கப்படுவது போன்று தரமான வேஷ்டி சேலைகள் வேறு எந்த ஆட்சியிலும் வழங்கப்பட்டது கிடையாது என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு மீதமுள்ளவர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதிக்குள் இலவச வேட்டி சட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளார். மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் குறித்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் ரொக்க பணம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.