தென்னிந்திய சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருப்பவர் சம்பத் ராம். இவர் தமிழில் 211 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் வெளியாகி 100 கோடி வசூல் சாதனை புரிந்த மாளிகபுரம் திரைப்படத்தில் முதன்மை வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் நடிகர் சம்பத் ராம் ஒரு பேட்டியில், நான் பல பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளேன்.

என்னுடைய 25 வருட உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்து விட்டது. தமிழில் விடுதலை மற்றும் தங்கலான் போன்ற பல படங்களில் நடித்து வருகிறேன். அதோடு தி கிரேட் எஸ்கேப், தி பேர்ல் பிளேட் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார். மேலும் தமிழ் வில்லன் நடிகர் ஒருவருக்கு ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.