தமிழக அரசின் முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், இதுவரை விண்ணப்பிக்க தவறிய பலர் தற்போது “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், திட்டத்தில் விடுபட்ட பல பெண்களுக்கு விரைவில் உரிமை தொகை வழங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஓரிரு மாதங்களில் மேலும் புதிய பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் கட்டமாக பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மகளிர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.