
தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏராளமான பெண்கள் பயன்பெறும் நிலையில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தோர் மற்றும் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் ஆகியவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் விரைவில் இணைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் 1.6 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும் என்றார். மேலும் புதிதாக ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தோர் தற்போது மகளிர் உரிமை தவிக்க விண்ணப்பிப்பதற்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.