
கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து 3-வது சர்வதேச விமானம் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே கோவையில் இருந்து துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபுதாபிக்கும் இயக்கப்பட இருக்கிறது. மேலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் வாரம் தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமான சேவையானது கோவையில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.