தமிழ் திரைப்படத் துறையில் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் சினேகா, லைலா, கணேஷ், யோகி பாபு, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

அதோடு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு தயாராக உள்ள நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் ஏற்கனவே வெளியான இந்த திரை படத்தின் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் போன்ற பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் 3 வது பாடல் ஆகஸ்ட் 3 ம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.