
2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில், இந்தியா உலக அளவில் 81-வது இடத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியப் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் தற்போது 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகையின் போது விசா பெற்று பயணம் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது. இதனால், இந்தியர்களின் சர்வதேச பயணங்களில் புதிய வசதிகளும், விரைவான திட்டமிடல்களும் சாத்தியமாகியுள்ளது.
இப்போது இந்தியர்கள் விசா பெறும் சிக்கல்கள் இன்றி கீழ்காணும் நாடுகளுக்கு நேரடியாக செல்லலாம்:
1. பூட்டான்
2. கம்போடியா
3. இந்தோனேஷியா
4. ஈரான்
5. ஜோர்டான்
6. கஸகஸ்தான்
7. லாவோஸ்
8. மலேசியா
9. மாலத்தீவுகள்
10. மகாவோ (சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதி)
11. மங்கோலியா
12. மியான்மார்
13. நேபாளம்
14. கத்தார்
15. இலங்கை
16. தாய்லாந்து
17. டிமோர்-லெஸ்டே
ஆபிரிக்கா:
இந்திய பயணிகள் இப்போது பின்வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எளிதாகச் செல்ல முடியும்:
1. அங்கோலா
2. புருண்டி
3. கேப் வெர்ட் தீவுகள்
4. கோமரோ தீவுகள்
5. ஜிபூட்டி
6. எதியோப்பியா
7. கினி-பிஸாவ்
8. கென்யா
9. மடகாஸ்கர்
10. மொரீஷியஸ்
11. மொசாம்பிக்
12. நமீபியா
13. ருவாண்டா
14. செனெகல்
15. செய்ச்செல்ல்ஸ்
16. சியாரா லியோன்
17. சோமாலியா
18. தான்சானியா
19. சிம்பாப்வே
கரீபியன் & பசிபிக் தீவுகள்:
இந்தியர்களுக்கு கிராமிய வாழ்க்கையும், கடல் சுற்றுலாவும் கொண்ட நாடுகளும் இப்போது எளிதாகப் பயணிக்கக்கூடியதாக மாறியுள்ளன:
கரீபியன் நாடுகள்:
பார்படாஸ், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், டொமினிகா, கிரனடா, ஹைட்டி, ஜமைக்கா, மான்செராட், செயின்ட் கிட்ட்ஸ் & நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் விந்சென்ட் & கிரெனடின்ஸ், ட்ரினிடாட் & டொபாகோ
பசிபிக் தீவுகள் மற்றும் ஓசியானியா:
குக் தீவுகள், ஃபிஜி, கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, நியூவெ, பலாவ் தீவுகள், சமோவா, டுவாலு, வனுவாட்டு
தென் அமெரிக்கா:
போலிவியா
விசா சிக்கல்கள் இல்லாமல் இந்தியப் பயணிகள் இப்போது மேலும் அதிக நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பதால், குடும்பம், தொழில், திருமணம், கல்வி, சுற்றுலா என எந்த நோக்கத்திற்கும் உலகம் முன் திறந்துவிட்டது. இந்த பட்டியலில் உள்ள நாடுகள், இந்தியப் பாஸ்போர்ட்டின் மதிப்பை மேலும் உயர்த்தி, இந்தியர்களுக்கு புதிய பயண வாய்ப்புகளை வழங்குகின்றன.