சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் நேற்று சட்டப்பேரவையில் நடந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்பொழுது சிறுபான்மையின மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் விதமாக குழுக்கள் அமைத்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு மின்மோட்டாரோடு கூடிய 6400 மதிப்புள்ள ஒரு தையல் இயந்திரம்  2500 மகளிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.