
கொளத்தூர் பகுதியில் வட சென்னை வளர்ச்சி திட்டம் கீழ் நடைபெறக்கூடிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த பிறகு திருவிக நகர் கனிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பெரியார் குறித்து மரியாதை இல்லாமல் பேசுபவர்களுக்கு தாங்கள் மரியாதை கொடுக்க தயாராக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநரின் அரசுக்கு எதிரான செயல்பாடு தங்களுக்கு ஆதரவை பெற்று தருகிறது. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு தாங்கள் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் தான் எங்களுடைய தலைவர். திமுகவில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் அவர்தான் தலைவர். அப்படிப்பட்ட அவர் குறித்து மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு நாங்களும் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. அவதூறுகளை பெரிதுபடுத்தவும் பொருட்படுத்தவும் நங்கள் விரும்பவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.