
ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் ஆர்சிபி அணியில் மீண்டும் விராட் கோலி விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை அந்த அணி 22 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துடன் நிலையில் இந்திய வீரர்களில் மிகவும் அதிக தொகைக்கு இடத்தில் விற்பனையான வீரர் என்ற பெருமையை விராட் பெற்றுள்ளார். அதே சமயத்தில் 18 வருடங்களாக பெங்களூர் அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். அவர் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுத்ததில்லை.
சிறப்பாக விராட் கோலி செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியாது என்பதால் வேறு அணிக்கு மாறுமாறு பலரும் கூறுகிறார்கள். இருப்பினும் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 18 ஆண்டுகளாக ஒரே அணியில் நீடிக்கிறார் விராட் கோலி. மேலும் இதன் மூலம் கிங்கு கிங்கு தான். விசுவாசம் னா அது கோலி தான் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் விராட் கோலியை தொடர்ந்து ஆர்சிபி அணியில் ரஜத் படிதாரை 11 கோடி ரூபாய்க்கும், யாஷ் தயாலை 5 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. மேலும் மொத்தமாக 3 வீரர்கள் மட்டுமே அந்த அணி தக்கவைத்துள்ள நிலையில் இந்த முறை பெங்களூர் அணியில் கேப்டனாக விராட் கோலி செயல்படுவார் என்று கூறப்படுகிறது.