
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதன்படி மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை 12,487 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்.
அதன்படி 4,46,471 மாணவர்களும், 4,40,499 மாணவிகளும் என மொத்தம் 8,86,970 பேர் எழுதுகிறார்கள். இது போக 25,841 தனி தேர்வர்களும், 273 சிறைவாசிகளும் எழுதுகிறார்கள். மொத்தமாக 9,13,084 பேர் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். 4113 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் பொது தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதும் அன்பு தம்பி தங்கைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். துணிவுடனும், உற்சாகத்துடனும் இந்த பொது தேர்வினை எழுதுங்கள். மேலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.