அதிமுக வரலாற்றில் மறைக்கப்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களைச் சசிகலா தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பனுக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் அரசியல் பகை நிலவிய காலகட்டத்தில், யாருக்கும் தெரியாமல் தான் செய்த ஒரு ரகசிய உதவியைப் பற்றி அவர் பகிர்ந்துள்ளார். ஆர்.எம். வீரப்பனுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க ஜெயலலிதா பிடிவாதமாக மறுத்தபோது, சசிகலா ஒரு தந்திரமான ‘காங்கயம்’ ஸ்கெட்ச் போட்டு அவரைப் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தாராம்.
”அம்மாவிற்கே (ஜெயலலிதா) தெரியாமல் நான் செய்த அந்த உதவி, பின்னாளில் அவர்கள் இருவரையும் இணைய வைத்தது” என்று சசிகலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பகைமையை மறந்து ஒன்றிணைவதே கட்சியின் பலம் என்பதற்கு ஆர்.எம். வீரப்பன் சம்பவமே ஒரு சாட்சி என்றும், அன்று நிலவிய கசப்பான சூழலைத் தான் மாற்றியது போல, இப்போதும் அதிமுகவில் நிலவும் பிரிவினைகளைத் தீர்த்து அனைவரையும் ஒன்று சேர்ப்பேன் என்று அவர் சபதம் பூண்டுள்ளார். சசிகலாவின் இந்த ‘காங்கயம்’ ரகசியம் அதிமுக வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
