ஐபிஎல் 2025 தொடர்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 15வது லீக் ஆட்டம் முடிவடைந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் 11 போட்டிகளில் ஏழு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பதிரானா முதல் போட்டியில் விளையாடவில்லை. தற்போது பதிரானா சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு பந்துவீச்சு மேலும் பலமடைந்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் முன்னாள் கேப்டனான தோனியோடு இருக்கும் நட்பு குறித்துபதிரானா வீடியோ ஒன்றில் பேசியுள்ளார் .

அதில், தோனி எனக்கு தந்தை போன்றவர். ஏனென்றால் சிஎஸ்கே அணியில் அவர்தான் என்னை  கண்டெடுத்து வழி நடத்துகிறா.ர் என்னுடைய தந்தை என்னை வீட்டில் எப்படி என்னை பார்த்துக் கொள்கிறாரோ அதேபோல தான் அவர் என்னை பார்த்துக் கொள்கிறார். இதனால் தான் தோனியை நான் என்னுடைய கிரிக்கெட்டின் தந்தை என்று கூறுகிறேன். என்னை முதலில் அவர் பார்த்த பொழுது மாலி என்று அழைத்தார். நான் மலிங்காவை போல பந்து வீசுவதால் என்னை அனைவரும் வீட்டில் அப்படி தான் அழைப்பார்கள். மாலி  என்பதற்கு சிங்களத்தில் தம்பி என்று பொருள். முதன் முதலாக அவர் என்னை தம்பி என்று அழைத்ததால் எனக்கு சந்தோசமாக இருந்தது. நான் மகிழ்ச்சி அடைந்தேன். இது ஒரு நல்ல பயணமாக அமையப் போகிறது என்று அப்போது எனக்கு தெரிந்து விட்டது” என்று கூறியுள்ளார்.