வேலூர் மாவட்டம் ஒட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் தனியார் கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை மோகன்ராஜ் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் மோகன் ராஜின் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து உறவினரின் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன்ராஜ் பெற்றோரிடம் பேசாமல் இருந்தார். அதன் பிறகு வேலைக்கு சென்ற மோகன் ராஜ் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் மோகன்ராஜ் சடலமாக அமைக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன் ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.