தொழில்நுட்ப வளர்ச்சியும் நவீன நகர அமைப்பும் கொண்ட பெங்களூரு மாநகரில், பெண்களின் பாதுகாப்பு என்பது மீண்டும் ஒருமுறை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அமைதியான நள்ளிரவு நேரத்தில், பெண் ஒருவர் வசிக்கும் வீட்டின் வாசலுக்கு வந்த நபர் ஒருவன், எவ்வித ஆடைகளும் இன்றி நிர்வாணமாக நின்றுகொண்டு, வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் வழியே உள்ளே எட்டிப்பார்த்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் கொடூரக் காட்சிகள், தற்போது இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்தப் பெங்களூரு நகரத்தையே உரைய வைத்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் வீட்டின் வெளியே விசித்திரமான சத்தம் கேட்பதைக் உணர்ந்த அந்தப் பெண், சந்தேகமடைந்து பாதுகாப்பு கேமராவின் பதிவுகளைச் சோதித்துப் பார்த்துள்ளார்.

அப்போது, உடம்பில் ஆடைகளே இல்லாமல் நிலைகுலைந்த மனநிலையிலோ அல்லது காம வெறியிலோ சுற்றித் திரிந்த அந்தப் வாலிபன், வாசற்படியிலேயே நின்று கொண்டு ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த கொடூரக் காட்சி தெரியவந்துள்ளது.

தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து, நள்ளிரவில் இதுபோன்ற அருவருப்பான மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நபர்களின் ஊடுருவல், அப்பகுதி மக்களிடையே குறிப்பாகப் பெண் பயணிகளிடமும் குடியிருப்புவாசிகளிடமும் பெரும் அச்ச அலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த மனநோயாளியை அல்லது காமுகனைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் போதிய தெருவிளக்கு வசதிகளையும், காவல் துறையின் நள்ளிரவு ரோந்துப் பணிகளையும் உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கொந்தளிப்புடன் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நவீன நகரங்களில் கூட பெண்களுக்குத் தங்களது சொந்த வீட்டிற்குள் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது பெரும் கவலையையும் ஆத்திரத்தையும் அளிப்பதாக அமைவதோடு, இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.