தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில்  பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட  பல சூப்பர் டூப்பர்  திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.  இந்நிலையில் சென்னையில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி தனது உடல்நலம் குறித்து மனம் திறந்துள்ளார்.

அப்போது, புகைப்பழக்கம், குடிப்பழக்கம், அசைவ உணவுகளை தொடர்வோர் 60வயதுக்கு மேல் வாழ்ந்ததில்லை. நடத்துனராக இருந்தபோது அடித்த சிகரெட் பாக்கெட்டுகளுக்கு கணக்கே இல்லை. இந்த பழக்கங்கள் கொண்ட என்னை அன்பால் ஒழுக்கமாக மாற்றியவர் என் மனைவி லதா. 73வயதிலும் நான் ஆரோக்கியமாக இருக்க அவரே காரணம் என நெகிழ்ந்தார்.