
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாளத் திரையுலக பிரபலங்கள் பலரும் பாலியல் புகாரில் சிக்கிவரும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை பூனம் கவூர் தெலுங்கு இயக்குனர் மீது ஒரு பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இவர் தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை, வெடி, பயணம், என் வழி தனி வழி மற்றும் நாயகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பூனம் கவூர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு தெலுங்கு இயக்குனர் நடிகையை கர்ப்பமாக்கி அவரின் வாழ்க்கையை சீரழித்து விட்டார். அந்த நடிகர் தெலுங்கு சினிமா துறையில் உச்ச இடத்தில் இருக்கும் நிலையில் தெலுங்கு நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட அந்த பஞ்சாபி நடிகைக்கு கொஞ்சம் உதவி செய்தது என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னதாக நடிகரும் ஆந்திர துணை முதல் வருமான பவன் கல்யாண் மற்றும் இயக்குனர் திரி விக்ரம் ஆகியோர் மீது நடிகை பூனம்கா ஒரு குற்றசாட்டுகளை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.