தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டிரைவர் ஜமுனா மற்றும் the great Indian kitchen ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்ததாக இவர் என் நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான சொப்பன சுந்தரி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியான போது, ரேப் பண்ணிடுங்க சார் என ஐஸ்வர்யா பேசிய வசனம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் பேட்டி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நான் அந்த டயலாக்கை சொல்ல மாட்டேன் என்றேன், இயக்குனர் தான் சொல்லுங்கள் சரியாக இருக்கும் என கூறியதாக விளக்கம் அளித்துள்ளார்.