
மும்பையில் பெண் ஒருவர் தன்னுடைய கணவரோடு நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி பெண்ணை மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து கைது செய்யப்பட்ட ஜோஸ்வா பிரான்சிஸ் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, அந்த பெண்ணின் கணவர் குடிப்பழக்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
அதனால் தன்னுடைய மனைவியை அவமானப்படுத்துவதற்கு அவர்கள் அந்தரங்கமாக இருக்கும் தருணங்களை அவர் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் தன்னுடைய நண்பர் ஜோஸ்வா பிரான்சிஸ் என்பவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் பிரான்சிஸ் அந்த பெண்ணுக்கு போன் செய்து அவருடைய அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை ஆபாச இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த அந்தரங்க வீடியோக்கள் நீக்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நீக்க மாட்டேன் என்று மிரட்டி பணம் வாங்கி இருக்கிறார் பிரான்சிஸ். ஆனால் இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியதால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.