
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபுரம் மாவட்டத்தில் அணில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இரு வீட்டாரும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் அணில் குமார் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ஒரு வீடியோவில் எனக்கு பெண் கொடுத்த அத்தை, மாமா மிகவும் நல்லவர்கள்.
அவர்கள் இருக்கும் போது மனைவி நன்றாக இருக்கிறார். அவர்கள் இல்லாவிட்டால் என்னை துன்புறுத்துகிறார். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார். அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள். அம்மா உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என வீடியோவில் பேசியுள்ளார். மேலும் அந்த வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தார். அதன் பிறகு பூச்சி மருந்து குடித்தை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.