சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரியும் 3 எருமை கன்றுகள், 2 மாடுகள் ஆகியவற்றை பிடித்தனர். அந்த மாடுகளும் கன்றுகளும் சோழம்பேடு ரோட்டில் ஆவடி மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கொட்டகையில் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் 50 பேர் திடீரென அங்கு வந்து மாடுகளை அவிழ்த்து விடுமாறு கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மகாலட்சுமி(30), தேவி(50), உமா(37) உள்ளிட்ட சிலர் கதவை திறந்து அத்துமீறி உள்ளே நுழைந்து மாடுகளை அவிழ்த்து கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் உமா, மகாலட்சுமி, தேவி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.