
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த பத்தாம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை திருச்சிக்கு அழைத்து வந்த தனிப்படை காவல்துறையினர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் அவரை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறைக்கு பெலிக்ஸ் ஜெரால்ட் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு முன் வெளியே அழைத்து வரும்போது பத்திரிக்கையாளர்களை பார்த்து பேசிய அவர், காவல்துறையினர் தனக்கு எந்த தொந்தரவும் தரவில்லை எனவும், அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஒரு பிரஸ்மீட் நடத்த இருக்கிறேன். அப்போது அனைத்தையும் விரிவாக கூறுகிறேன். அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க என்று காவல் நிலைய அதிகாரிகளால் வேனில் ஏற்றப்படுவதற்கு முன் அவர் தெரிவித்தார்.