சென்னை மாவட்டம் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த பொருளை டெலிவரி செய்ய வந்த ஊழியரான சதீஷ்குமார் என்பவர் அந்த பெண் வீட்டில் குளித்துக் கொண்டிருப்பதை நோட்டமிட்டுள்ளார். இதனையடுத்து தனது செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் பயத்தில் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.