இஸ்ரேல் மீது முதலில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஈரானின் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் அமெரிக்க உளவுத்துறையில் இருந்து டாப் சீக்ரெட் என்ற பெயரில் 2 ஆவணங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அந்த ஆவணங்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது உள்ளிட்ட விவரங்கள் இருந்தது. இந்நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது அமெரிக்காவை திருப்தி படுத்துவதற்காக தான் பாலஸ்தீனத்தை விட்டுவிட்டு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது இஸ்ரேல் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களும் நம் நாட்டில் இருப்பவர்களும் உடன் பிறந்தவர்கள் போன்றவர்கள். இருவரில் ஒருவர் பெயர் சீயோனிஸ்டுகள். மற்றொருவர் பெயர் சிங் பரிவார். இவர்கள் இருவருக்கும் வித்தியாசம் கிடையாது. ஐநாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரை நடத்த வேண்டும் என்று பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ஆதரவு கரம் நீட்டுகிறது. இதில் மகத்தான நடுநிலை கொண்ட நம்முடைய நாடு ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலையில் இருக்கிறது.

நாம்  பாலஸ்தீனத்தின் பக்கத்திலும் இல்லை பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வேண்டும் எனவும் கூறவில்லை. இதன் மூலம் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்பது தெளிவாக தெரிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இத்தாலி போன்ற பல நாடுகள் நிறுத்திவிட்ட நிலையிலும் இந்தியா இன்னும் நிறுத்தவில்லை. அந்த நாடு விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக நம் இந்தியா மாறிவிட்டது. பாலஸ்தீனத்தில் நடப்பது போர் கிடையாது. ஏனெனில் இரு தரப்பினரிடமும் சமமான ஆயுதங்கள் இருந்தால் மட்டும்தான் அது போர். அங்கு நடப்பது இனப்படுகொலை. மேலும் இஸ்ரேல் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துவதால் இது ஒரு ஒரு தலைபற்றமான‌ போர் தான் என்று கூறியுள்ளார்.