இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாதிபராக இருக்கும் அம்பானி வீட்டு திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜெட் விமானம், தங்க உடைகள், ஆட்டம் பாட்டம் என பிரம்மாண்டமாக களைக்கட்டி உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு மணமக்கள் வித்தியாசமான முறையில் எளிமையாக திருமணம் செய்துள்ளனர்.

அதாவது மணமக்கள் திருமணம் முடிந்த கையோடு புல்டோசரில் ஊர்வலமாக சென்றனர். அதாவது கோரக்பூரில் திருமணம் நடந்து முடிந்த நிலையில் மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் புல்டோசரில் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக ஊர்வலம் சென்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.