
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சிளாக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் வருகின்ற ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் விவிஎஸ் லட்சுமண் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் அபுதாபியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளுடன் பேசினார்.
அப்போது அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். அதாவது தேசிய அணியை வழிநடத்துவதை விட பெரிய கவுரவம் எதுவும் கிடையாது. ஏனெனில் அந்த பதவி என்பது இந்தியாவில் வசிக்கும் 140 கோடி மக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். அவர்களின் ஆதரவு மற்றும் பிரார்த்தனை தான் இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவும். எனக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதில் விருப்பம் தான். வீரர்களின் வெற்றிக்கு முதல் படி ஓய்வறையில் அவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுவதான். மேலும் இதைத்தான் நான் கொல்கத்தா அணியில் பின்பற்றினேன் என்று கூறியுள்ளார்.