ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அன்னமய்யா மாவட்டத்தில் ரயில்வே கோட்டூரில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் டிரைவர் உட்பட மொத்தம் 21 பேர் பயணம் செய்தனர். அதில் 20 பேர் மாம்பழ அறுவடைக்காக பணியமர்த்தப்பட்டிருந்த தொழிலாளர்கள்.
இந்த நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்பாராத விதமாக சாலையில் கிடந்த மணலில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர்.
இந்த விபத்து இரவு 9.30 மணி அளவில் நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சொன்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த 11 பேரில் 4 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது லாரி ஓட்டி சென்ற டிரைவரின் கவனக்குறைவினாலே இந்த விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது. மேலும் விபத்து ஏற்பட்ட சாலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், அந்த இடத்தில் டிரைவர் மிக அதிவேகமாக லாரியே ஓட்டி சென்றதாகவும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
எனவே அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினை ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடியதால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விபத்து குறைத்து தகவலறிந்த ஆந்திர அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உரிய மருத்துவ செலவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
