பீகார் மாநிலம் பாடலிபுத்திரா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பேராசிரியர் ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைகளை முழுவதும் படித்து பார்க்காமலேயே தன்னுடைய பேனாவினால் சரிபார்க்கிறார். சில நொடியில் விடைத்தாள் பக்கங்களை புரட்டி சரி பார்த்தவாறு மதிப்பெண்களை வழங்குகிறார்.

இந்த நிலையில் இதுகுறித்த வீடியோ பரவியதையடுத்து பேராசிரியர் மதிப்பெண் வழங்கும் விடைத்தாள்களுக்கு உரிய மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள். இதனை தொடர்ந்து பணியில் அலட்சியமாக செயல்பட்ட அந்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.