
பீகார் மாநிலத்தில் முசாபர் மாவட்டத்தில் பல்வீர் குமார் என்பவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டை எப்படி தயாரிக்க வேண்டுமென்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தார். அதாவது தீக்குச்சிகள் மற்றும் பட்டாசுகளில் இருந்து துப்பாக்கி குண்டுகளை சேகரித்துள்ளனர். அதன் பிறகு அவர் வயலுக்கு குழந்தைகளுடன் சென்றுள்ளனர். பின்னர் ஒரு சிறிய காய்ந்த புல் குவியலில் அந்த மருந்துகளை போட்டு வெடிக்க வைக்க தொடங்கினர்.
ஆனால் அவை பற்றவில்லை என்பதால் பல்வீர் குமார் அந்த குழந்தைகளை ஊதும் படி கூறினார். இதனை கேட்டு குழந்தைகள் ஊதிய நிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் உடல் கருகி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து லவ் குமார் (வயது 8), குஷ் குமார் (வயது 5), ஜெய்தீப் குமார், அபியன்சு குமார் (வயது 6) மற்றும் குட்டு குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.
உடனே பல்வீர் குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். பின் வெடி சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த குழந்தைகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
यकीन मानिए..ये बच्चे बम बना रहे थे🤦🏻♂️
चेहरे पर बर्नहील क्रीम और हाथ में बिस्किट. मामला बिहार के मुजफ्फरपुर का है. YouTube पर वीडियो देखकर ये बच्चे बम बना रहे थे. जोरदार धमाके के बाद कुछ ऐसी हालत हो गई. #Bihar । #Youtube pic.twitter.com/xuNZ51jWYZ
— NDTV India (@ndtvindia) August 8, 2024
“>