தமிழ் சினிமாவில் கடைசி 2007-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற தூவானம் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஹரிசரண் சீனிவாசன். இந்த படத்தை நியூட்டன் என்பவருடன் இணைந்து இவர் இயக்கியிருந்தார். இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான டென்னிஸ் வீரர் வி. சந்திரசேகரின் பயோபிக்கையும் சீரியலாக இயக்கியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வி. சந்திரசேகர் டேபிள் டென்னிஸ் போட்டியில் 3 முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் சீரியல்கள் மற்றும் படம் இயக்குவது போன்று திரைக்கதையும் ஹரிசரண் சீனிவாசன் எழுதுவார். இந்நிலையில் திரை உலகில் பன்முக திறமை கொண்ட கலைஞராக விளங்கிய இயக்குனர் ஹரிசரண் சீனிவாசன் திடீரென காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருடைய மனைவி ரேக்சும் தமிழ் சினிமாவில் வெளியான 500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சப் டைட்டில் எழுதியுள்ளார். இதில் பாகுபலி, வாரிசு, எந்திரன், விக்ரம் போன்ற படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.