
பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சாலை விபத்தில் கடுகாயமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது . மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்த முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் சோனு சூட் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவிகளை செய்து பாராட்டுகளை பெற்றார். இந்த நிலையில் சாலை விபத்தில் சோனு சூட்டின் மனைவி சோனாலி படுகாயம் அடைந்ததை அறிந்த ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.