மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே ஹடப்சலில் ஸ்வப்னாலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் உமேஷ் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உமேஷ் ஒரு பயணியை ஏற்றி கொண்டு பீட் என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே தனது நண்பரை அனுப்பி மனைவி வீட்டில் இருக்கிறாரா என்பதை பார்க்கும்படி கூறினார். அங்கு வீடு பூட்டி கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உமேஷ் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். இரண்டு நாட்கள் தீவிரமாக தேடிய நிலையில் சில தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

உடனே வீட்டில் இருந்த படுக்கையுடன் கூடிய சோபாவிற்குள் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பொருட்கள் சரியாக இருக்கிறதா என பார்ப்பதற்காக உமேஷ் சென்றார். அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில் ஸ்வப்னாலி உடல் இருந்ததை கண்டு கதறி அழுதார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஸ்வப்னாலி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அடிக்கடி ஒரு வாலிபர் வந்து சென்றுள்ளார். அவர் சில காலம் ஒன்றாக ஸ்வப்னாலியுடன் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்தது தெரியவந்தது. அந்த நபரை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தனது கணவரின் சித்தப்பா என ஸ்வப்னாலி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த நபர் தான் ஸ்வப்னாலியை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.