வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமியின் தந்தை மாட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி மலம் கழிப்பதற்காக வீட்டிற்கு அருகில் இருக்கும் புதர் பகுதிக்கு சென்றார். இந்த நிலையில் மது அருந்தி கொண்டிருந்த இளமாதன்(28), வீரப்பன்(28), சின்ன ராசா(30) ஆகியோர் சிறுமியை நோட்டமிட்டனர். அவர்கள் சிறுமியின் வாயை பொத்தி சிறிது தூரம் தூக்கி சென்ற மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் வியாபாரி தனது மகளை தேடி சென்றார். சிறிது தூரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. அங்கு ஓடி சென்ற பார்த்தபோது அலங்கோலமான நிலையில் மகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே அந்த வாலிபர்கள் தப்பித்து சென்றனர். சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சிறுமியின் உடல் நலம் மோசமானது. இதனால் மன உளைச்சலில் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வீரப்பன், இளமாதன், சின்னராசு வாங்கிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .