
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ உ சி நகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் சாந்தி குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்து சிதறியதால் சாந்தி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குருசாமி தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.