
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அபேபூர் வனப்பகுதியில் வேலை செய்ய வந்த மூவர், காட்டுக்குள் ஒரு காட்டு யானையை பார்த்து அதனுடன் செல்பி எடுக்க எண்ணிய போது, அவர்கள் விபரீதத்தை சந்தித்தனர்.
ஸ்ரீகாந்த் என்பவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காட்டுக்குள் கேபிள் பதிக்கும் பணிக்காக சென்றிருந்தனர். அப்போது, சிட்டகாங்க் பகுதியிலிருந்து யானை ஒன்று வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. மூவரும் அந்த யானையை பார்க்க சென்றபோது, ஸ்ரீகாந்த் அதை நெருங்கிச் செல்பி எடுக்க விரும்பினார், ஆனால் மற்ற நண்பர்கள் அதைத் தவிர்க்க நினைத்தனர்.
யானையின் அருகில் சென்ற ஸ்ரீகாந்த், செல்பி எடுக்க முயன்றபோது யானை திடீரென கோபத்துடன் அவரை விரட்டிச் சென்று மிதித்தது. மற்ற இரண்டு நண்பர்கள் அதிர்ச்சியுடன் தப்பி ஓடி, தங்களது உயிரைப் பாதுகாத்துக்கொண்டனர். சம்பவம் நடந்த உடனே ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்து, வனத்துறையினரின் உதவியுடன் ஸ்ரீகாந்தின் உடலை மீட்டனர்.