குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில், மணிநகர் பகுதியில் உள்ள மகாலட்சுமி கார்னரில் இருந்து பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்டின் கூம்பை ஒரு பெண் வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் போது  பல்லியின் வால் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த பெண் வாந்தி எடுத்ததையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த தகவலின்படி, ஐஸ்கிரீம் வாங்கிய விற்பனை நிலையத்திலிருந்து எந்தவிதமான ரசீதும் வழங்கப்படவில்லை. “இது போன்ற பிரபலமான பிராண்டில் கூட இப்படி நடக்கிறது என்றால், மற்றவை பற்றி என்ன நம்பிக்கை வைத்திருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சம்பவத்துக்கு பின் கிளை மேலாளரிடம் புகார் அளித்த போதும், அவர் அலட்சியமாக பதில் அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் முன்பே ஜோத்பூரில் உள்ள லாபினோ ஔட்லெட்டில், பீட்சா பெட்டிக்குள் இறந்த கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த சம்பவத்தில் கடுமையான விசாரணை மேற்கொண்டு, பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.