மத்திய அரசு ஆனது மக்களுடைய நலனை கருத்திக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்தவகையில் தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 200 ரூபாய் மலிவாக கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி  தலைநகர் டெல்லியில் இதுவரை 113 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலையானது தற்பொழுது 903 ஆக குறைந்தது. அது மட்டும் இல்லாமல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய எல்பிஜி இணைப்புகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

இந்த முடிவுக்கு பிறகு டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ஆனது 1103 ரூபாயிலிருந்து 903 ஆக குறைந்துள்ளது. சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்த பிறகு உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மொத்தம் 400 ரூபாய் பலன் கிடைக்கும். இவர்களுக்கு ஏற்கனவே அரசு 200 ரூபாய் மானியம் அளித்து வந்தது. இதன் காரணமாக சிலிண்டரை 903 ரூபாய்க்கு வாங்கி வந்தார்கள் .ஆனால் தற்போது இருநூறு ரூபாய் குறைந்ததால் மேலும் பலன் கிடைக்கும். அதாவது உஜ்வாலா பயனாளிகளுக்கு இனி 703 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும்.