
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் மீது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு வழக்கு இருக்கும் நிலையில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் கரூரில் எம்.ஆர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கரூரில் உள்ள அவருடைய வீடு, ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், அவருடைய தம்பி சேகர் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும் சோதனையை அதிகப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.