அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக 8 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்தனர். சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்து வைத்திருக்கும் 8 கோடி ரூபாய் சொத்து அவரது வருமானத்தை விட 125 சதவீதம் அதிகமாகும். இதனால் சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை, மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் குமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.