
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்தவித உறவும் கிடையாது என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறிவிட்டார். நாங்கள் தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது என்பதாலும் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளோம்.
இடைத்தேர்தல் என்றாலே திமுக புது புது யுக்திகளை செய்து பொதுமக்களை கவர்வார்கள். அதோடு பணம் ஆறாக ஓடும். திமுகவினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள். எந்த கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்து நின்று போட்டியிட தயாரா. அதிமுக போன்று திமுகவும் தனித்து நின்று அவர்களுடைய திறமை மற்றும் செல்வாக்கை காண்பிக்கட்டும். உங்கள் சாதனையை மக்களிடத்தில் சொல்லி தேர்தலை சந்திக்க தயாரா.? ஜெயலலிதா போன்று முதல்வர் ஸ்டாலினும் திமுக தலைவர்களும் முடிவெடுப்பார்களா. என்று கூறினார். மேலும் ராகுல் காந்திக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.