
அதிமுக தொண்டர்கள் அனைவருமே திமுகவிற்கு வர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, அதிமுக ஆபத்தான சூழ்நிலையை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. அக்கட்சித் தொண்டர்கள் திமுகவிற்கு வர வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் அனைவரையும் அரவணைத்துக் கொள்வார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தில் இருந்தும் டெல்டா பகுதியில் இருந்தும் அழுத்தம் அதிகரித்துள்ளது என்று பேசியுள்ளார்.