கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தொண்டர்கள் திமுகவில் இன்று இணைந்து பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில், கரூர் மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, மாவட்ட மாணவரணி செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட 21 தேமுதிகவினர், அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், பாமகவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர், மேலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது. தங்கள் தொகுதிகளில் மக்கள் சேவையை முன்னிலைப்படுத்தும் திமுக அரசின் பணிகளால் ஈர்க்கப்பட்டு தான் திமுகவுடன் வருகிறோம் என புதிய அணியில் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த இணைப்பு நிகழ்வு, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகும் குறிப்பிடப்படுகிறது.
மாநில வளர்ச்சியை 11.19 சதவீதமாக உயர்த்தி, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தங்களுக்கு தேவை என உணர்ந்து, கரூர் மேற்கு பகுதி தவெகவை சேர்ந்த 58 நபர்கள், இன்று தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.. pic.twitter.com/udDM4a5mwq
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) August 31, 2025
“>
